புதிய பொருளாதார தடைகளை விதித்தால் உறவுகளை துண்டிக்கத் தயார் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு
புதிய பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார் என்று ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கைதுசெய்து சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் ரஷ்ய அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அவரை உடனடியாக விடுவிக்கக்கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பொருளாதார […]
கார் கண்ணாடிகளை கொள்ளையிட்ட நபர் கண்ணாடிகளுடன் சிக்கினார்..!
(செ.தேன்மொழி)தெமட்டகொட பகுதியில் கார் கண்ணாடிகளை கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தெமட்டகொட பொலிஸ் சோதனைச்சாவடியில் நேற்று சந்தேகத்திற்கிடமான சைக்கிள் ஒன்றை அவதானித்துள்ள பொலிஸார் அதனை சோதனை செய்துள்ளர். இதன்போது சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கார் கண்ணாடி சோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பஞ்சிகாவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ பகுதியில் நிறுத்தி […]
‘சர்வதேசத்திற்கு தெளிவாகக் கேட்ட விடயம் பிரதமர் மஹிந்தவுக்கு அருகிலிருந்தோருக்கு கேட்கவில்லை’: முஜிபுர்
(நா.தனுஜா)கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திற்கு மிகத்தெளிவாகக் கேட்டிருக்கிறது. எனினும் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே அது கேட்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மிகத்தெளிவாகவே குறிப்பிட்டார். […]
பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது – தேசிய பண்பாட்டுப் பேரவை
Published by T. Saranya on 2021-02-13 16:32:50 தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. வடகிழக்கு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை உள்ள எட்டு மாவட்டங்களிலும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தன்னெழிச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் பங்கெடுத்தார்கள் என்பது ஒரு மாபெரும் […]
யாழ்.பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் – கலாநிதி எஸ்.ஏ.சூசை ஆனந்தன்
Published by T. Saranya on 2021-02-13 16:19:43 (எம்.நியூட்டன்) யாழ்ப்பபாணம் பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் அவ்வாறு அமைவதன் மூலம்தான் கடல் வளப்பொருளாதாரம் செழிப்புறும் என கலாநிதி எஸ்.ஏ.சூசை ஆனந்தன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறு மீனவர்கள் தொழில் செய்வதற்காகன கொள்கை உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் முறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் பல்கலைக்கழக துறைசார்ந்தோர் கலந்து கொண்டு கருத்துருவாக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், […]
சிறைக்குள் வீசப்பட்ட போதைப்பொருட்களடங்கிய பொதி | Virakesari.lk
Published by T. Saranya on 2021-02-13 16:08:12 (செ.தேன்மொழி) களுத்துறை சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களடங்கிய பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த பொதியில் 3 தொலைபேசிகள் , 45 கிராம் கஞ்சா போதைப்பொருள் , 4 புகையிலைகள் , புகைப்பிடித்தலுக்காக பயன்படுத்தப்படும் 5 லைட்டர்கள் , 5 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 5 கடதாசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதிகளில் யாருக்காவது வழங்கும் நோக்கத்திலேயே இந்த […]
தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை ஓட ஓட விரட்டிய கரடி
ஈராக்கில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி ஒன்று தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஓட ஓட விரட்டியுள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள குர்திஸ்தானில் வீடுகளில் வளர்க்கப்பட்ட 6 சிறிய கரடிகளை மீட்ட வனத்துறையினர் அவற்றை வனப்பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனர். அப்போது அதனைக் காண, ஏராளமான உள்ளூர்வாசிகள் நின்றதால், அவர்களைக் கண்ட கரடிகள் குழப்பமும், கோபமும் அடைந்து பொதுமக்களை விரட்டியடித்தன. இறுதியில் வனத்துறையினர் கரடியை திசை திருப்பி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். Source link
கால் மேசை பந்தாட்டம் யாழில் முதல் முறையாக அறிமுகம்
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsal play ground) நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளராக சிவா ஜீவிந்தனை இலங்கை டெக் பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது. இந்நிகழ்வுக்கு இலங்கை டெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான டெக் பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், […]
சீனாவில் பி.பி.சி. உலக செய்திச் சேவை தடைக்கு : பிரிட்டன், அமெரிக்கா கண்டனம்
சீனாவில் பி.பி.சி. உலக செய்திச் சேவை தடை செய்யப்பட்டமைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகிறது. இதற்கு ஹொங்கொங் விவகாரம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் சீன அரசுக்கு சொந்தமான சீனா குளோபல் டெலிவிஷன் செய்தி அலைவரிசையை இங்கிலாந்தில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை இங்கிலாந்தின் ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ஒப்கொம் கடந்த வாரம் ரத்து செய்தது. […]