கிளிநொச்சியில் பாடசாலைகள் இயங்கவில்லை ! | Virakesari.lk

0
25


Published by T. Saranya on 2021-01-11 14:22:27

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்திலும்  முழுமையான ஆதரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய  கல்வி ஆண்டின் முதல் நாளாகஇன்று  பாடசாலைகள்  ஆரம்பிக்கப்பட்ட போதும் பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை இடம் பெறவில்லை.

நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுவதுடன் அரச திணைக்களங்கள் செயற்பட்டாலும் அதற்கான மக்கள் வருகையின்றி  காணப்பட்டது.

இதேநேரம் வங்கிகளில் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்ற போதும் வங்கிகளுக்கு மக்கள் வருகை தருவதும் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here