கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு

கிளிநொச்சியில் முதலாவது கொறோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்று சமூகத் தொற்றென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத்தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  குறித்த தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுமாறு வடமாகாண கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் எரிபொருள் கடை ஒன்றினை நடத்தி வரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு தொற்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் […]

சர்வதேசத்தை பகைத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது : கிரியெல்ல சாடல்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) இறக்குமதிகளை தடை செய்து அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது. நவீன உலகில் தனிமையாக வாழமுடியாது. நாடுகளுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இனக்கப்பாட்டுடன் செல்வதன் மூலமே நாட்டை முன் கொண்டுசெல்லலாம் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு செயற்படவே முயற்சிக்கின்றது. இறக்குமதி தடைசெய்யும் போது எமது ஏற்றுமதிகளும் தடைசெய்யப்படுகின்றது. அரசாங்கத்தின் இறக்குமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சிரிக்கை விடுத்திருக்கின்றது.   […]

பந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன ? : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பன்னிபிட்டிய பகுதியில், வைத்தியர் ஒருவரின் காணிக்குள் சென்ற பந்தை பொறுக்கச் சென்ற 17 வயதான மாணவன் ஒருவர், அக்காணி உரிமையாளரான வைத்தியரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். Source link

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(எம்.மனோசித்ரா) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 375 ஆக உயர்வடைந்துள்ளது.  இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை 204 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.  அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 847 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 14 497 பேர் குணமடைந்துள்ளதோடு , 5791 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  மரணங்களின் எண்ணிக்கையும் 87 ஆக உயர்வடைந்துள்ளது. 462 பேர் […]

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என ஒரு பெளத்தனாக இருந்து அரசாங்கத்தை கேட்கின்றேன். அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல. உலக சுகாதார அமைப்பு அந்த […]

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை (23.11.2020) மேலும் 428 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Source link

அட்டன் உள்ளிட்ட சில நகரங்களை அபிவிருத்தி செய்ய  ஜீவன் நடவடிக்கை

மலையகத்தில் பிரதான நகரங்களான அட்டன், மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்ய தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அட்டன் நகரில் ஹட்டன் புகையிரத பகுதியில் நிர்மானிக்கப்படும் கட்டடத்தொகுதி மற்றும் பழைய மார்கட் தொகுதியும், தலவாக்கலையில் உள்ள சந்தை தொகுதி, மஸ்கெலியா நகரம் கொட்டகலை கொமர்சல் பகுதியில் இடைநிறுத்தப்பட்ட நடைபாதை பூங்க ஆகியன அபிவிருத்தி செய்வது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இன்று […]

மாந்தை மேற்கு கிராம அலுவலகர் கொலை – விசாரனை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மாற்றம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(13) உத்தரவிட்டார். மாந்தை மேற்கில் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகர் தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்தோடு இன்றைய […]

கூகுள் பலூன் தொழிநுட்ப வேலைத்திட்டத்தை மைத்திரியே இல்லாமலாக்கினார்: ஹரீன் குற்றச்சாட்டு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) கூகுல் பலூன் தொழிநுட்பத்தை அன்று ஆரம்பித்திருந்தால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள தனிமைப்படுத்தல் காலத்தில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். இவ்வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்வதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே இல்லாமலாக்கினார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே […]