5 வருட சிறைத் தண்டனையின் பின் விடுதலையான சீன மனித உரிமைகள்  சட்டத்தரணி!

0
72


சீனாவின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி வாங் குவான்சாங் ஐந்து ஆண்டுகளின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு சீனா கடுமையான ஒடுக்கு முறை காரணமாக 44 வயதான வாங் குவான்ஷாங் உட்பட 200 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளையும், அரசாங்க விமர்சகர்களையும் கைதுசெய்தது.

இந் நிலைலேயே ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி லி வென்சு ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் விடுதலையான வாங் குவான்சாங் சீனாவின் தலைநகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்னும் அனுப்பி வைக்கப்படாது, கிழக்கு சாண்டோங் மாகாணத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Photo Credit : aljazeera

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here