20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை செப்டெம்பர் 29

0
13


பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செப்டெம்பர் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை இந்த மனுமதான பரிசீலனைகளை மேற்கொள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின்  சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டுமானால்  பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில் நேற்று வரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here