வோர்னர் – பிஞ்சின் சதத்தின் உதவியுடன் பத்து விக்கெட்களால் அவுஸ்திரேலியா அபார வெற்றி

0
83


இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி டேவிட்வோர்னர் ஆரோன் பின்ஞ் இருவரினதும் சதங்களின் உதவியுடன் பத்து விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பாயில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியின் சார்பில் சிகார் தவான் 74 ஓட்டங்களை பெற்றார்,ஸ்டார்க் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

256 என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடியவேளை அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் டேவிட்வோர்னர் ஆரோன் பிஞ்ச்  இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி தமது விக்கெட்களை இழக்காமல் அவுஸ்திரேலிய அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றனர்

அவுஸ்திரேலிய அணியின் இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் ஆட்டமிழக்காமல் சதம் பெற்றனர்.

டேவிட் வோர்னர் 112 பந்துகளில் மூன்று சிக்சர்களின் துணையுடன் 128 ஓட்டங்களை பெற்றார்.

பின்ஞ் 114 பந்துகளில் 110 ஓட்டங்களை பெற்றார்.

ஆட்டநாயகனான தெரிவு செய்யப்பட்ட  டேவிட்வோர்னர் கருத்து தெரிவிக்கையில் 255 ஓட்டங்களிற்கு இந்திய அணியை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here