நாட்டில் நேற்று 6 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

0
21


நாட்டில் நேற்றைய தினம் ஆறு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,953 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய மூன்று பேரும், மலேசியாவிலிருந்து திரும்பிய இரண்டு பேரும் மற்றும் கென்யாவிலிருந்து வந்த ஒருவருமே இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் 136 கொரோனா தொற்றாளர்கள் சிக்சிசை பெற்று வருகின்றனர். இவர்களுள் இரு வெளிநாடினரும் உள்ளடங்குவர்.

அண்மையில் நாட்டிற்கு திரும்பிய 1,024 இலங்கையர்கள் கொவிட் -19 க்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதவும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 630 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 55 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர் 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2,805 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12 ஆக பதிவாகியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here