ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகியது

0
92


Published by T. Saranya on 2020-02-01 09:08:00

பிரித்தானியா உத்தியோகபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேயுள்ளதாக என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  பிரித்தானியா வெளியேற முடிவெடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விடயத்தால் பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாமல் இருந்த நிலையில் அக்காலப்பகுதியில்  பிரதமராகவிருந்த இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள்.

அதன் பிறகு UKயின் பிரதமராக வந்த தற்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற கடும் முனைப்புக் காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியப்படவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாததால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்குச் சென்றார்.

அத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றியும் பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் நீடிக்காமல் உடனடியாக பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றார். பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அவ் ஒப்பந்தம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேறியது.

பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்ற பின்னர், பிரெக்சிட்டுக்கு பிரித்தானிய ராணி 2ம் எலிஸபெத்தும்  தனது ஒப்புதலை வழங்கினார்.

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரித்தானியா எடுத்த இவ் முடிவின் மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கிய நிலையில் பேசினார்கள்.

அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரித்தானியாவுக்கு பல்வேறு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதே சமயம், பிரித்தானியாவின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எச்சரித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தற்போதைய ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 பேரும், எதிராக 49 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்குப் பின் பிரித்தானியா நேற்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி வெளியேறியுள்ளது.

பிரித்தானியாவின் நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு வெளியேறவிருக்கிறது. அத்துடன் ‘பிரெக்ஸிட்டும் முடிவுக்கு வந்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here