எலும்பு அடர்த்தி குறைபாடு என்ற பாதிப்பிற்குரிய அறிகுறிகள்

0
91


நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு ஒஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு அடர்த்தி குறைபாடு பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் விற்றமின் மற்றும் ஊட்டசத்து சிகிச்சை, முறையான வாழ்க்கை முறையால் இதனை மாற்றியமைக்க முடியும். அதனால் இதற்குரிய அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொண்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற்று, உங்களை தற்காத்துக் கொள்ள இயலும்.

அடிக்கடி நகங்கள் உடைவது,  அதிலும் குறிப்பாக ஆணி அடித்தால் ஏற்படும் பிளவு போன்று நகங்கள் உடைந்தால் அதனை ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் மற்றும் கொலாஜன் சத்து குறைபாடு காரணமாகவும் இவை வரக்கூடும். சிலருக்கு தாடை எலும்பில் இருந்து ஈறுகள் விலகிவிடும். இதனால் தாடைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் இதுவே ஒஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பை உருவாக்கிவிடும்.

இதன் காரணமாக பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உங்களுடைய பல் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம். அடிக்கடி தசைப்பிடிப்பு அல்லது வலி, உங்களது இதயத்துடிப்பு வழக்கத்துக்கு மாறாக வேகமாகத் துடிப்பது, எட்டு மணி தியாலத்திற்கு மேலும் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, மது மற்றும் புகையை அளவுக்கதிகமாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கூட ஒஸ்டியோபொரசிஸ் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதற்கு தொடக்க நிலையிலும் சிகிச்சை எடுப்பதும், நாளாந்தம் 500 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை பின்பற்றுவதும், இதற்கான சிறந்த நிவாரணம். அத்துடன் நாளாந்த உடற்பயிற்சியை தொடர்ந்தால்.. இதனை முற்றாக தடுக்கலாம்.

டொக்டர் கோபால்சாமி.

தொகுப்பு அனுஷா.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here