உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேநபர் கைது | Virakesari.lk

0
57


(எம்.மனோசித்ரா)

நிட்டம்புவ – பஸ்யால பிரதேசத்தில் கம்பஹா குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய எல்லகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் கம்பஹா, ஹெட்டிபொல, மினுவாங்கொட மற்றும் அத்தனகல்ல ஆகிய நீதவான் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here