இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்  | Virakesari.lk

0
52


இலங்கையில் இன்று (19.04.2020) இரவு மேலும் 2 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 271 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்களும் தனிமைப்படுத்தப்படாதவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மற்றையவர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவராவார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 166 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 122 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 91 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here